
உன்னிடம்
கூற விரும்புகிறேன்
உனக்கான நம்பிக்கை
புத்தம்புதியதாய்
என்னிடமே உள்ளதென்பதை
ருசித்துக்கொண்டிருக்கும்
உன்னிடம்
கூற விரும்புகிறேன்
உன் தூண்டிலின் பிம்பம் பற்றித்தான்
உன் புழுவை அடைந்தேனென்பதை
எப்பொழுதும்
ஒரு புன்முறுவலோடு
இழந்துக்கொண்டே இருப்பது
அத்தனை சுலபமானதல்ல என்பதை
சாம்பலாகும்
சமரசமான எதிர்பார்ப்புகள்
உனக்கு மட்டுமே
உரிதானதல்ல என்பதை
கண்கள் மூடி
கைகள் அகல
நின்றிருக்கும் உன்னிடம்
கூற விரும்புகிறேன்
அது நீர் வீழ்ச்சி அல்ல
அருவி
கொட்டிக் கொடுக்கிறதென்பதை