
அகலமான சாலை
புழுதி பறக்காமல்
எண்ணற்ற
அதி வேகமான
வாகனங்கள் - வித விதமாய்
வாட்டமாய் நடைப்பாதை
ஆங்காங்கே
இன்று உதிர்ந்த
காய்ந்த சருகுகள்
நாட்கணக்கில்
மழை அடித்தும்
சகதி படியாத
பாதை
மழையில் நனைந்து
இன்னும் சிறிது தூரம்
நடக்கலாம்
எங்காவது
மண்வாசனையை மட்டும்
மோப்பம் பிடித்து
ஒரு
குடுவையில்
அடைத்துக் கொள்ளவேண்டும்.
3 comments:
நாட்ல பாதி பேர் மண் வாசனைய வெளி நாட்ல தான் தேடிட்டு இருக்கோம் :)
Love it!
Thanks Elangovan
Post a Comment